கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்

தொண்டைமண்டலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 300 மேற்பட்ட கிராமங்களில் பண்டைய காலம் முதலான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதுவரை 2300 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறிப்பட்டுள்ள. இவற்றில் இது வரை சுமார் 1300 கல்வெட்டுகள் பல்வேறு புத்தகங்களில் வெளிவந்துள்ளன. இதில் இந்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய கல்வெட்டுகள், தமிழக தொல்லியல்துறையின் கல்வெட்டு புத்தகம், தொல்லியல் கழகத்தின் வெளியீடுகள், தனிநபர்கள் வெளியிட்ட கல்வெட்டுகள், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் கல்வெட்டுகள் என அனைத்தும் அடங்கும்.  இக்கல்வெட்டுகளின் வழியே இப்பகுதியை அரசாண்ட அரச வம்சத்தினர், அவர்கள் கொடைகள், கட்டிய கோயில்கள், வதித்த வரிகள், மக்கள் வாழ்க்கை முறை, வணிகம், வேளாண்மை, குழுக்கள், ஊராட்சி நிர்வாகம், கோயில்நி வந்தங்கள், வழக்குகள், தண்டனைகள் என முன்னோர்கள் வாழ்க்கையின் கண்ணாடி போல அமைந்துள்ளது. இக்கல்வெட்டுகள் அனைத்தும் வெளியிடப்பட்டால் திருவண்ணாமலை மாவட்ட வரலாறு மேலும் செழுமை பெறும்.

[table “” not found /]

திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகள்

தமிழிக்கல்வெட்டுகள்

 

இக்கல்வெட்டுகளில் காலத்தால் முந்தையது வெம்பாக்கம் வட்டம் மாமண்டூரில் உள்ள குகையில் உள்ள தமிழி கல்வெட்டாகும். இக்கல்வெட்டு கி.பி 2 ஆம் நூற்றாண்டு என்பர். செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டியில் கிடைத்த நாணயத்தில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தின் அருகே ஜம்பையில் ஒரு தமிழிக்கல்வெட்டும் உள்ளது.

 பல்லவர் கல்வெட்டுகள்

               பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதிக்கு அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம் அமைந்திருப்பதால் இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு பல்லவர்கள் கால கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இப்பகுதியில் காலத்தில் முந்தைய கல்வெட்டாக மகேந்திரவர்மனின் மாமண்டூர் கல்வெட்டும், சீயமங்கலம் கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு பல்லவர்கள் ஏற்படுத்திய கிரந்த எழுத்தில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுகள் இரண்டுமே புகழ் பெற்றவை. இவைதவிர செங்கம் பகுதி நடுகற்களில் பல்லவர்கள் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கின்றன. வந்தவாசி பகுதியில் சமணர்கள் வாழ்ந்த ஊர்களில் பல்லவர்கள் கால கல்வெட்டுகள் அதிக அளிவில் கிடைக்கின்றன. வென்குன்றம், கீழ்சாத்தமங்கலம், மடம், வெடால், மருதாடு, கீழ்ககொடுங்காலூர், திருவண்ணாமலை வட்டம் பொற்குணம் போன்ற ஊர்களில் சுமார்30 க்கும் மேற்பட்ட பல்லவர்கள் கால கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

வட்டெழுத்துக்கல்வெட்டுகள்

               தமிழ் வரிவடித்தில் முக்கிய இடம் பெறும் வட்டடெழுத்து இம்மாவட்டத்தில் உள்ள பல நடுகற்களிலும் சில கொற்றவை சிலைகளிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை சேர்ந்ததாகும். இக்கல்வெட்டுகள் தமிழின் வரிவடி வ வளர்ச்சிக்கு சிறந்த சான்றுகளாக உள்ளன. நடுகற்களிலேயே அதிக அளவு வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோழர்கள் கல்வெட்டுகள்

               இம்மாவட்டத்தில் முற்கால சோழர்கள் முதல் பிற்கால சோழார்கள் வரை 100 க்கும் மேற்பட்ட கல்வெட்டகள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் சோழ ஆட்சி முறை, கொடை, வாழ்க்கைமுறை, வணிகம், ஊர் நிர்வாகம் போன்றவை பற்றி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன. சோழர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட் கோட்டங்கள், மண்டலங்கள், கிராமங்கள், ஊர் அவைகள் பற்றியும் வழக்கு பரிபாலம் செய்தது பற்றியும் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருவண்ணாமலை, இராயண்டபுரம், காப்பலூர், பிரம்மதேசம், கூழமந்தல் உள்ளிட்ட பல ஊர்கள் சோழர்கள் கால கல்வெட்டுகளை தாங்கி நிற்கின்றன.

பாண்டியகல்வெட்டுகள்

               பாண்டியர்கள் ஆட்சி தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரம் பரவி இருந்ததற்கு ஆதாரமாக வந்தவாசி அருகிகே அண்மையில் ஆச்சமங்கலத்தில் ஒருபாண்டியர் கால கல்வெட்டு கிடைத்தது. மேலும் பல கல்வெட்டுகள் மாவட்டத்தில் பல ஊர்களில் கிடைக்கின்றன. சுந்தரபாண்டியன் , குலசேகர பாண்டியன் கல்வெட்டுகள் அதிக அளவில் கிடைக்கின்றன.

ஹொய்சாலகல்வெட்டுகள்

               துவாரசமுத்திரம் என்றழைக்கப்படும் பகுதியில் இருந்து 14 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசவம்சம். இவர்கள் திருவண்ணாமலையை இரண்டாவது தலைநகரமாக அமைத்து ஆட்சி புரிந்தனர். இவர்கள் கலை, கல்வெட்டுகள், கோயில்கள் திருவண்ணாமலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிடைக்கின்றன.

விஜயநகரகல்வெட்டுகள்

               14 ஆம் நூற்றாண்டு முதலே இம்மாவட்டத்தில் விஜயநகர கால கல்வெட்டுகள் கிடைக்கின்றன. குமார கம்பணாவின் கல்வெட்டு இங்கு கிடைக்கும் காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். இக்கல்வெட்டுகள் வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் முழுமைக்கும் பல இடங்களில் கிடைக்கிறது.  இவர்களில் முக்கியமானவராக கருதப்படும் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டுகள் இம்மாவட்டத்தில் அதிகமாக கிடைக்கின்றன. இவர்கள் காலத்திலும் வரி விதித்தல், கோயில் கட்டுதல், விரிவு படுத்துதல், ஏரி, குளங்கள் ஏற்படுத்துதல், சந்தை, பேட்டை, தொழில் நகரங்கள் ஏற்படுத்துதல் என பல விரிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாயக்கர்கல்வெட்டுகள்

               17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களால் பல தானங்கள் வழங்ககிய கல்வெட்டுகள் இம்மாவட்டத்தில் கிடைக்கின்றன. வேலூர் சின்ன பொம்மு நாயக்கர், செஞ்சி நாயக்கர், தஞ்சை நாயக்கர்களது பல கல்வெட்டுகள் இம்மாவட்டத்தில் கிடைக்கின்றன.

ஆங்கிலேயர்கள்கல்வெட்டுகள்

               ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியின் போது நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தியுள்ளனர். கல்வெட்டுகளாக அவர்கள் தங்கள் உறவினர்கள், ஆட்சியாளர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு ஏற்படுத்திய கல்லறைளிலேயே கல்வெட்டுகள் பதிப்பித்தார்கள். அந்த வகையில் இம்மாவட்டத்தில் ஆரணியிலும், அரியப்பாடியிலும் பல கல்லறைகள் காணப்படுகின்றன. இவை தவிர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கல்வெட்டகளும் சிலகிடைக்கின்றன.

மாவட்டக்கல்வெட்டுகள் – மூலபாடத்துடன்.

 

திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் –

தமிழிக் கல்வெட்டு

பல்லவர்கள் காலம்

இராஷ்டிரகூடர்கள் கல்வெட்டு

சோழர்கள் கல்வெட்டு

போசளர்கள் கல்வெட்டு

பாண்டியர்கள் கல்வெட்டு

சம்புவராயர்கள் கல்வெட்டு

விஜயநகர பேரரசு கல்வெட்டு

நாயக்கர்கள் கல்வெட்டு

பிற முக்கிய கல்வெட்டுகள்

  1. வயலூர் கல்வெட்டு காட்டும் தமிழ் பற்று மிக்க கோப்பெருஞ்சிங்கன்

     2. திருவண்ணாமலை மாவட்ட செக்குக்கல்வெட்டுகள்

3.உலகை ஆளப்போகும் ராஜராஜன் – கட்டியம் கூறும் கல்வெட்டு.