திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வரலாறு, தொல்லியல், கோயில்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், சமண மற்றும் புத்தத் தடயங்கள், பாறை ஓவியங்கள் ஆகியவற்றை நேரடி கள ஆய்வு மூலம் பதிவு செய்து வருகிறது.
மரபு நடைப் பயணங்கள், கருத்தரங்கங்கள், ஆவணப்படுத்தல், புகைப்படப் பதிவு, கல்வெட்டு வாசிப்பு, தொல்லியல் விழிப்புணர்வு ஆகியவை அமைப்பின் முக்கிய களச் செயல்பாடுகளாகும்.
ஒரு சமூகத்தின் வேர்களைத் தேடிச் செல்லும் பயணமே மரபு நடை ஆகும். திருவண்ணாமலை மாவட்டமும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் பெருங்கற்காலப் பாறை ஓவியங்கள், பல்லவர்-சோழர் காலக் குடைவரைகள், நடுகற்கள் மற்றும் சமணத் தடயங்களின் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இவற்றுள் 20 முக்கியத் தளங்களில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய களப்பயணங்களின் வரலாற்றுத் தொகுப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடைத்திய மரபு நடைப் பயணங்கள்.
திருமலை சமணக்கோயில்
செங்கம் நடுகற்கள் – பெரிய கோளப்பாடி, தொரப்பாடி, மேல்பள்ளிப்பட்டு
பாறைஓவியங்கள் – செத்தவரை, கீழ்வாலை, பனைமலை
ஜம்பை மரபு நடை – ஜம்பை, ஆதி திருவரங்கம்
தேவிகாபுரம்- கனககிரி, பெரியநாயகி அம்மன் கோயில்
நெடுங்குன்றம், மடம், சீயமங்கலம் மரபு நடை
வந்தவாசி, கூழமந்தல், மாமண்டூர் பிரம்மதேசம் மரபு நடை
செஞ்சி மரபு நடை- திருநாதர்குன்று, மேலச்சேரி குடைவரை, சிங்கவரம் குடைவரை, தளவானூர் குடைவரை
செங்கம் – இடபந்துரை நாயனார் கோயில், பெருமாள் கோயில் ஓவியம், ஜவ்வாதுமலை மரபு நடை- கோவிலூர் சிவன்கோயில், மேல்பட்டு புதிய கற்காலத் தடம், மேல்பட்டு பெரிய மருதமரம்
செங்கம் நடுகற்கள் - ஜவ்வாதுமலை மரபு நடை- கோவிலூர், மேல்பட்டு, பழங்கோட்டை, வீரணம், சாத்தனூர், சே. கூடலூர், தாய்தெய்வக்கல், சின்னியம்பேட்டை குளம்